தென்னூர் கிளாஸிக் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில் டெவலப்மெண்ட் நடத்தும் அறிமுக வகுப்பு சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்.
வேலைக்கு போனா பேங்க் வேலைக்கு போகணும், இல்லாட்டி கவர்மெண்ட் வேலைக்கு போகணும் என்ற எண்ணம் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவியருக்கு இருப்பது இயல்பு தான்.
வங்கி பணிகளில் எப்படி சேருவது என்பதை ஒரு அறிமுக வகுப்பின் மூலம் விளக்கவிருக்கிறார் பிரபல வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன். மும்பையில் 33 வருடங்கள் பல வங்கிகளில் பணி செய்து அனுபவம் உள்ள இவர் நடத்தவிருக்கிறார்.
இந்த பயிற்சி வகுப்பு வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தென்னூரில் உள்ள கிளாஸிக் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில் டெவலப்மெண்டில் நடக்கவிருக்கிறது. இந்த வகுப்பு இரண்டு மணி நேரம் நடக்கவிருக்கிறது.
இதில் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும், படித்து முடித்த மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம். மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவச வகுப்பாகும் . முன்பதிவு செய்வது கட்டாயமாகும். விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9952105350. பதிவு செய்யும் முதல் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதி.
கீழே உள்ள கூகுள் பார்ம் பூர்த்தி செய்து அனுப்பவும்.